சுந்தரர், சேரமான் நாயனாரின் கொடுங்களூர் பகுதிக்கு 2ஆம் முறையாய்ப் பயணம் மேற்கொள்கின்றார். திருப்புக்கொளியூர் எனும் அவிநாசித் தல எல்லையை நெருங்குகையில், அருகருகாய் அமைந்திருந்த இரு இல்லங்களில்; ஒன்றில் மங்கல ஒலியும் மற்றொன்றில் அழுகுரலும் ஒரே சமயத்தில் கேட்க நேரிட, அதுகுறித்து அங்குள்ளோரிடம் வினவுகின்றார்.
'அவ்வீடுகளில் வாழ்ந்திருந்த; 5 வயது நிரம்பிய இரு பாலகர்கள் முன்பொரு சமயம் மடுவினில் விளையாடியிருந்த சமயத்தில் ஒரு பிள்ளையை முதலையொன்று விழுங்கி விட, தப்பிப் பிழைத்த மற்றொரு பாலகனுக்கு அன்றைய தினம் உபநயன விழா நிகழ்ந்தேறி வருகின்றது. மாண்ட பிள்ளையைப் பெற்றவர் தங்களது புதல்வனும் பிழைத்திருந்தால் இது போன்றதொரு விழாவினைச் செய்திருக்கலாமே என்றெண்ணி அழுத வண்ணமிருக்கின்றனர்' என்றறிகின்றார்.
மாண்ட பிள்ளையின் பெற்றோர் சுந்தரனாரின் வருகையைக் கண்டு, தங்கள் கவலைகளை முற்றிலும் மறந்தவர்களாய், 'சுவாமி, உங்களைப் பலகாலும் தரிசித்து வணங்க பெருவிருப்பம் கொண்டிருந்தோம். எங்கள் அன்பு பொய்க்கவில்லை, நீங்கள் இவ்விடத்து எழுந்தருளும் பெறற்கரிய பேற்றினை இன்று பெற்றோம்' என்று சுந்தரரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றனர்.
சுந்தரர், 'மைந்தனை இழந்த துன்பமும் மறந்து நாம் வரப்பெற்றமைக்கு இவ்விதம் மகிழ்கின்றனரே, சிவனடியார்கள் மீது இத்தூய உள்ளத்தினருக்கு எத்துனை ஈடுபாடு' என்று நெகிழ்ந்து, அனைவருடனும் முன்னர் மடுஇருந்த இடத்திற்குச் செல்கின்றார். வறண்ட நிலையில் காணப்பெறும் அவ்விடத்தில் 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும்' எனும் பனுவலால் அவிநாசியுறைப் பரம்பொருளிடம் பிள்ளைக்காக விண்ணப்பிக்கின்றார்.
'கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே' எனும் 4ஆம் திருப்பாடலைப் பாடிய கணத்திலேயே, அவிநாசி இறைவரின் ஏவலால், கூற்றுவன் வறண்டிருந்த அம்மடுவை நீரினால் நிறைத்து, முதலையை உயிர்ப்பித்துப் பின் அதன் வாயினின்று, உயிர்ப்பிக்கப் பெற்ற மாண்ட பாலகனை, கடந்த ஆண்டுகளின் வளர்ச்சியோடும் கூடிய நிலையில் உமிழுமாறு செய்கின்றான். பிள்ளையின் பெற்றோர் பிள்ளையை ஓடிச்சென்று வாரியணைத்து, நன்றிப் பெருக்குடன் சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றனர்.
அருணகிரிப் பெருமான் மேற்குறித்துள்ள அற்புத வரலாற்று நிகழ்வினை இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,
(1)
'மதப்பட்ட விசாலம்' என்று துவங்கும் அவிநாசித் திருப்புகழில்,
-
செறிப்பித்த கராஅதின் வாய்!மக
வழைப்பித்த புராண க்ருபாகர
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் ...தம்பிரானே
(சொற்பொருள்: கரா - முதலை)
(2)
'அழகு தவழ் குழல்' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில்,
-
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
அடியர் தொழ மகவழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...முதுநீதர்

No comments:
Post a Comment