பின்வரும் திருப்பாடலில் 'சிவபத்தி ருக்கை ஐயம் போக உரைத்தான்' என்று 'ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப் பனுவல்கள் ரிக் வேத சாரமானவை' என்று அருணகிரிநாதர் ஐயத்திற்கு இடமின்றிக் குறிக்கின்றார். இனி இத்திருப்பாடலின் பொருளை அறிந்துணர்வோம்,
(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 96)
திருக்கை அம்போதிகளோ; கஞ்சமோ; நஞ்சமோ; திருமால்
திருக்கை அம்போ; செய்ய வேலோ; விலோசனம்; தென்னன் அங்கத்
திருக்கை அம்போருகக் கைந்நீற்றின் மாற்றித் தென்னூல் சிவ!பத்
தி ருக்கை ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே!!
-
இத்திருப்பாடலின் 2ஆவது வரியின் இறுதியிலுள்ள 'தென்னன்' எனும் சொல்லிலிருந்து 'ஞானசம்பந்த மூர்த்தியைப் பற்றிய குறிப்பு' துவங்குகின்றது.
-
'தென்னவனாகிய 'நின்றசீர் நெடுமாற நாயனாரின்' கூனைத் (அங்கத் திருக்கை) தன் திருக்கரத்திலுள்ள திருநீற்றினால் போக்கியருளி, தமிழ் நூலாகவும்; சிவபக்தியை உண்டாக்க வல்லதாகவும், ருக் வேத சாரமாகவும் விளங்கும் தேவாரப் பனுவல்கள் வாயிலாக, 'சிவபெருமானே பரம்பொருள்' என்று ஐயம் தீருமாறு உரைத்தருளியவர் ஞானசம்பந்த மூர்த்தி' என்று அருணகிரிப் பெருமானார் போற்றுகின்றார்.
-
(குறிப்பு: 3ஆம் வரியின் இறுதியில் வரும் 'சிவபத்' எனும் எழுத்துக்களோடு, 4ஆம் வரியின் முதல் எழுத்தான 'தி' என்பதையும் சேர்த்து 'சிவபத்தி' என்று வாசித்தல் வேண்டும்)
மற்றொரு புறம் அருணகிரியாரின் காலத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நம் தெய்வச் சேக்கிழாரும் ஞானசம்பந்த மூர்த்தியை 'இருக்கு மொழிப் பிள்ளையார்' என்று ரிக் வேத குறியீட்டுடன் இனிமையாகக் குறித்துள்ளார்,
(பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 80)
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாளனார் அருள்கண்(டு) அமரரெலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்
.

No comments:
Post a Comment