கந்தப் பெருமான் தினைப்புனத்தில் வேடுவ இளைஞன்; சைவ வயோதிகர் என்று இருவேறு வடிவங்களில் தோன்றி காதல் திருவிளையாடல்கள் புரிந்தும் வள்ளி நாயகியின் காதலைப் பெற இயலாது போகின்றது. இனி என் செய்வதென்று வாட்டமுற்று, ஒப்புவமையில்லாத மூர்த்தியாகவும்; தமையனாகவும் விளங்கியருளும் விநாயகப் பெருமானை நினைந்து, 'முன்னே வந்தருள்வாய் முதல்வா' என்று அழைக்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 110)
பொன்னே அனையாள் முன்போகும் திறல்நோக்கி
என்னே இனிச் செய்வதென்றிரங்கி எம்பெருமான்
தன்னேரிலாதமரும் தந்திமுகத்(து) எந்தைதனை
முன்னே வருவாய் முதல்வா என நினைந்தான்
அக்கணமே பிரணவ முகத்தினரான நம் கணபதி இளவலான அறுமுகக் கடவுளுக்கு இரங்கி, மலைபோன்ற யானையொன்றின் திருவடிவு தாங்கித் தொடர்ந்து பிளிறியவாறு, வயோதிக வேலவனை நீங்கிச் சென்று கொண்டிருக்கும் வள்ளி தேவியின் முன்னாக எழுந்தருளிச் சென்று அச்சுறுத்துகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 111)
அந்தப் பொழுதில் அறுமாமுகற்(கு) இரங்கி
முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
தந்திக் கடவுள் தனிவாரணப் பொருப்பு
வந்துற்றதம்மா மறிகடலே போல் முழங்கி
வள்ளியம்மை கணபதிக் களிற்றினைக் கண்ணுற்றுப் பதறியவாறு மீண்டும் பொய்த் தவவேடம் பூண்டிருந்த வயோதிக வேலவனிடத்து விரைந்து திரும்பி, 'இவ்வேழத்திடமிருந்து என்னைக் காத்தருள்வீர், உம்முடைய சொற்படி நடப்பேன்' என்று குமாரக் கடவுளின் பின்னாகச் சென்று அச்சத்தினால் தழுவிக் கொள்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 112)
அவ்வேலையில் வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
பொய்வேடம் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
இவ்வேழம் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
செய்வேன் எனஒருபால் சேர்ந்து தழீஇக் கொண்டனளே
தினைப்புன அரசியின் தழுவுதலால் அறுமுகக் கடவுள் திருவுள்ளம் பெரிதும் மகிழ்கின்றான். (வள்ளி தேவி அறியாதவாறு) யானை முக வள்ளலைப் பணிந்து போற்றி, 'எம்பெருமானே, தம்முடைய வருகையினால் இவள் பால் கொண்டிருந்த மையல் தீரப் பெற்றேன், இனி தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்ப எழுந்தருளிச் செல்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 114)
கந்த முருகன் கடவுள் களிறுதனை
வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
புந்தி மயல் தீர்ந்தேன் புனையிழையும் சேர்ந்தனளால்
எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்
-
(குறிப்பு: நம் கந்தப் பெருமான் ஆயிரமாயிரம் கோடி அண்டங்களுக்குத் தனிப்பெரும் தலைவனாக விளங்கியிருப்பினும் தமையனான விநாயகப் பெருமானுக்கு என்றுமே அடங்கிய நிலையில், பேரன்புக்குரிய இளவலாகத் திகழ்பவன். 'எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்' எனும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல் வரி மூலம் இதனை உணரப் பெறலாம், 'எம் தந்தை' என்பதே 'எந்தையாக' மருவியது).

No comments:
Post a Comment