திருமண நிகழ்வு நடந்தேறிய பின்னர் குமாரக் கடவுள் தெய்வயானை தேவியுடன் அம்மையப்பரை அன்புடன் வலம் வந்து பெருவிருப்பத்துடன் அவர்களின் திருவடிகளில் மும்முறை வீழ்ந்துப் பணிகின்றான்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 254)
இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
அவ்வையொ(டு) அத்தனை அன்பொடு சூழ்ந்து
வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான்
-
(சொற்பொருள்: மன்றல் - திருமணம், அவ்வை - அன்னை, அத்தன் - தந்தை)
சிவமூர்த்தியும் அம்பிகையும் தங்களை வணங்கியிருந்த மணமக்கள் இருவரையும், திருவுள்ளத்தில் பெருமகிழ்வுடன் எடுத்தணைத்துப் பேரருள் புரிந்து, தங்களுடைய பக்கத்திலிருத்தி உச்சி மோந்து, 'நம்முடைய முதன்மைத் தன்மையினை உங்களுக்கு அளித்தோம்' என்றருள் புரிகின்றனர். அற்புதப் பகுதியிது, சிவசக்தியரின் வற்றாத தனிப்பெரும்கருணைக்கு ஓர் எல்லையுமுண்டோ? அண்டசராசரங்கள் யாவினுக்கும் தனிப்பெரும் தலைமை கொண்டருளும் ஆதிப்பரம்பொருள் இச்சமயத்தில் சிவஞான வடிவினனான நம் குமர நாயகனுக்கு அத்தலைமையினைத் திருமணப் பரிசாக அளித்தருள் புரிகின்றார்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 255)
அடித்தலத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்(து)
எடுத்தணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி
முடித்தலத்தினில் உயிர்த்(து) உமக்(கு) எம்முறு முதன்மை
கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்க கொள்கையினார்
-
(சொற்பொருள்: பாங்கரில் - பக்கத்தில், முடித்தலத்தினில் உயிர்த்து - உச்சி மோந்து)

No comments:
Post a Comment