ஆறுமுகக் கடவுள் வள்ளிமலையில் பல்வேறு வடிவங்களில் தோன்றி திருவிளையாடல்கள் புரிந்து இறுதியில், தமையனான விநாயகப் பெருமானின் அருளால் வள்ளி நாயகியின் காதலைப் பெற்று மகிழ்கின்றான். பின்னர் வள்ளிதேவிக்குப் பரம்பொருள் வடிவினனான தன் சுய திருக்கோலத்தினைக் காண்பித்து அருள் புரிகின்றான்.
(1)
ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருத்தோள்களுடனும், பன்னிரு திருக்கரங்களில் வேல்; வச்சிராயுதம் முதலிய ஆயுதப் படைகளோடும், மரகத மயிலும் உடனிருக்கப் பேரானந்தத் திருக்கோலத்தில் வள்ளிதேவியின் முன்னாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 116)
முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும்
கொன்னார் வைவேலும் குலிசமும் ஏனைப்படையும்
பொன்னார் மணி மயிலுமாகப் புனக்குறவர்
மின்னாள் கண்காண வெளி நின்றனன் விறலோன்
-
(சொற்பொருள்: கொன்னார் - பெருமை பொருந்திய, விறலோன் - வெற்றி பொருந்திய)
(2)
ஆறுமுகப் பரம்பொருளின் காண்பதற்கரிய இத்திருக்கோலத்தைத் தரிசிக்கப் பெறும் நம் வள்ளியம்மை பெருவியப்புடன் கந்தவேளை வணங்கிப் பணிகின்றாள், திருமேனியில் வியர்வை தோன்றுமாறு விதிர்விதிர்த்து நடுங்கி, அகம் குழைந்து ஆறாக் காதலுடன் விண்ணப்பிக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 117)
கூரார் நெடுவேல் குமரன் திருவுருவைப்
பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமும்
சேரா நடுநடுங்காச் செங்கை குவியா வியரா
ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள்
-
(சொற்பொருள்: பரவலுறா - துதித்து, விம்மிதமும் சேரா - வியப்புற்று, வியரா - வியர்த்து)
(3)
'வேலேந்தி நின்றருளும் பெருமானே, உம்முடைய இவ்வற்புதத் திருக்கோலம் தாங்கி அடியவளைத் தழுவாமல் இவ்வளவு நேரம் (பல்வேறு வடிவங்களில் தோன்றி) வீணே கழித்தீரே, இனி இக்கொடியவள் செய்துள்ள குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து, அடியவளை விரைந்து ஆட்கொண்டு அருள்வீர்' என்று பணிகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 118)
மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையும்
கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள்
-
(சொற்பொருள்: கொன்னே - வீணே)
(4)
குமாரக் கடவுளும் திருவுள்ளம் மகிழ்ந்து, 'வள்ளி நாயகியே, இப்பிறப்பிற்கு முன்னர் நீ உலகமுண்ட திருமாலின் மகளாகத் தோன்றியவள், நம்மை அடைவதற்கென அரியதொரு தவநெறியில் நின்றொழுகினாய். ஆதலின் இப்பிறவியில் இம்முறையில் உன்னை ஆட்கொண்டோம்' என்றருளிச் செய்து, நம் அம்மையான வள்ளிதேவியைத் தழுவி அருள் புரிகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 119)
உம்மை அதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
நம்மை அணையும்வகை நற்றவம் செய்தாய் அதனால்
இம்மைதனில் உன்னை எய்தினோம் என்றெங்கள்
அம்மை தனைத் தழுவி ஐயன் அருள்புரிந்தான்
-
(சொற்பொருள்: உம்மை - முற்பிறப்பு)

No comments:
Post a Comment