முருகப் பெருமான் வள்ளி நாயகியின் இல்லம் நாடிச் சென்று, தேவியை அழைத்துக் கொண்டு வள்ளிமலையின் எல்லைக்கப்பாலுள்ள சோலையொன்றிற்குச் செல்கின்றான். மகளைத் தேடியவாறு அவ்விடத்திற்கு வரும் நம்பிராஜனும்; மற்றுமுள்ள வேடுவர்களும், தங்கள் குலதெய்வமென்று உணராமல், வேடுவக் கோலத்திலிருந்த கந்தப் பெருமானை அம்புகளால் கடுமையாகத் தாக்கத் துவங்குகின்றனர்.
அதுகண்டு பதறும் வள்ளி தேவி அறியாமையுடைய அவர்களைத் தண்டிக்குமாறு வேலவனிடம் முறையிடுகின்றாள். குமரப் பெருமானின் ஏவலால், கொடியிலிருந்த சேவல் அவ்விடத்தே தோன்றி பெருவொலி எழுப்ப, வேடுவர்கள் யாவரும் அக்கணமே மடிந்து வீழ்கின்றனர்.
(1)
சீற்றம் சிறிது தணிந்த பின்னர், வளர்ப்புத் தந்தையும் மற்றுமுள்ள சுற்றத்தினரும் இறந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்று அம்மை வாட்டமுறுகின்றாள். வள்ளிதேவிக்கு அவர்கள் பாலுள்ள அன்பினை உலகறியச் செய்யும் திருவுள்ளத்துடன் கந்தப் பெருமான் அவர்களை நோக்கிச் செல்ல, அம்மையும் உடன் தொடர்கின்றாள்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 185)
தந்தையும் முன்னையோரும் தமரும் வீழ்ந்திறந்த தன்மை
பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத்(து) இரங்கிச் சோரக்
கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
சிந்தையில் அருளோடேக அனையளும் தொடர்ந்து சென்றாள்
(2)
இதற்கிடையில் அவ்விடத்தில் நாரத மாமுனி தோன்றுகின்றார், சிவகுமரனையும் வள்ளியம்மையையும் பணிந்து வணங்கி, 'ஐயனே, அம்மையை ஆட்கொள்ளும் பொருட்டு நீங்கள் புரிந்தருளிய திருவிளையாடல்கள் யாவற்றையும் அடியேனுக்கு விளக்கமாகக் கூறியருள் புரிவீர்' என்று விண்ணப்பிக்கின்றார்.
-
கந்தப் பெருமானும், தினைப்புனத்தில் வேடுவக் கோலத்தில் வள்ளி தேவியிடம் காதல் மொழி பேசியது, வேங்கை மரமாகவும் வயோதிகக் கோலத்திலும் தோன்றித் திருவிளையாடல் புரிந்தது, விநாயகப் பெருமானின் உதவியுடன் தேவியின் அன்பைப் பெற்றது, தேவிக்குத் தன் சுயவுருவைக் காண்பித்து ஆட்கொண்டது, இறுதியில் தேவியுடன் அச்சோலைக்கு வரும் வழியில் நம்பிராஜனும் வேடுவர்களும் தன்னால் மாண்டது' என்று நடந்தேறிய நிகழ்வுகள் யாவற்றையும் கூறியருள் புரிகின்றான்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 186)
செல்ல நாரதப்பேர் பெற்ற சீர்கெழு முனிநேர் வந்து
வல்லியோடிறைவன் தன்னை வணங்கிநின் செய்கை எல்லாம்
சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல் தொட்டு
மல்லல் வேட்டுவரை அட்டு வந்திடும் அளவும் சொற்றான்
(3)
வேலவனின் திருவிளையாடல்களைக் கேட்கப் பெறும் நாரத முனிவனும், 'ஐயனே, வேடுவர்களின் அறியாமை காரணமாக அவர்களைத் தண்டித்தது முறையே, எனினும் அவர்களுக்கு மீண்டும் நல்லருள் புரியாமல் வேடர்குலத் தோன்றலான அம்மையுடன் இவ்விடம் விட்டு அகலுதல் முறையோ?' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார். கருணைக் கடலான உமை மைந்தனும், 'நாரதா, நீ சொல்வதே நமக்கும் ஏற்புடையது' என்றருளிச் செய்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 187)
பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத்தோரைச்
செற்றமொடட்டு நீக்கிச் சிறந்த நல்லருள் செயாமல்
பொற்றொடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ என்னா
மற்றிவை முனிவன் கூற வள்ளலும் அஃதாம் என்றான்

No comments:
Post a Comment